12 மணி நேரத்தில் 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 12 மணி நேரத்தில் 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜேன்டேஷோ போஸ்லே, சென்னை - கடற்கரை கண்ணகி சிலை அருகே பலூன் வியாபாரம் செய்து வருகிறார். ஞாயிறன்று இவரை அணுகிய ஒரு பெண், சினிமா படப்பிடிப்புக்கு தேவை என்று கூறி, போஸ்லேவின் குழந்தையைக் கேட்டுள்ளார். அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் குழந்தையை மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற அந்தப் பெண் மாயமானார்.  இதுகுறித்த புகாரின்பேரில் மருத்துவமனை காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மர்சீனாவின் 2 வயது குழந்தை ரஷிதாவை காணவில்லை. ரயில்வே காவல்துறையினரிடம் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்சீனாவின் 3-வது கணவரின் நண்பர் குழந்தையை தூக்கிச் சென்றது பதிவாகியிருந்தது. சென்னையில் 12 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திருடப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்க தனிப்படை போலீசார் முனைந்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்