194 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அமமுக வெற்றி

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 94 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. 27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர், 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று உள்ளது. திமுகவைவிட சற்று குறைவான இடங்களில் அதிமுக கூட்டணிவென்றுள்ளது. அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர அமமுக, நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் கண்டன. இதில் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் உறுப்பினர் பதவியைப் பிடித்துள்ளது. அமமுக 94 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளைப் பிடித்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 14, தஞ்சை 10, சிவகங்கை 8, மதுரை 7, திருவண்ணாமலை 6, ராமநாதபுரம், கடலூர், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 5 இடங்களில் அமமுக வென்றுள் ளது. கரூர், கூட கன்னியாகுமரி, திருப் பூர் ஆகிய 3 மாவட்டங்களில் அமமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . டிடிவி. தினகரனால், அமமுகவை தொடங்கி மக்களவை தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓரிடத்தில்கூடவெல்ல முடியவில்லை. இதனால் அதன் பிறகு நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அமமுகபோட்டியிடவில்லை. தற்போது அமமுகவை அரசியல் கட்சியாக தினகரன் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு அமமுக சந்தித்த உள்ளாட்சித் தேர்தலில் 94 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைப் பிடித்துள்ளது. எனினும், ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களைக் கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்