அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நன்றி

புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திமுக 11, அதிமுக 8, காங்கிரஸ் , தமாகா 1 ஆகிய இடங்களைப் பிடித்தது. திமுக கூட்டணியுடன் சேர்த்து, 13 உறுப்பினர்கள் இருந்ததால், திமுகவினரே மாவட்ட சேர்மனாகும் வாய்ப்பு அதிகம் இருந்தது. இந்த நிலையில் தான், மறைமுகத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி என்பவர் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இதில், பல லட்சம் ரூபாய்க்குக் குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 13 உறுப்பினர்கள் இருந்த நிலையில் 10 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால், விரக்தியடைந்த ஒரு சில திமுக உடன் பிறப்புகள் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். இந்தலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்டச் சேர்மன் வாய்ப்பு திமுக மாவட்ட பொறுப்பாளரான எம்.எல்.ஏ ரகுபதியால் தான் விட்டுப்போனதாகவும், இதேபோல், திருமயத்தின் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யாத திமுக திருமயம் ஒன்றிய பொறுப்பாளர் அழகு (எ) சிதம்பரத்திற்கும் திமுக தொண்டர்கள் நன்றி அறிவிப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில், " புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணிகள் அதிக இடங்கள் பிடித்தும், மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு மாவட்ட உறுப்பினர் 3 நபரை அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த, தளபதியின் நம்பிக்கை நட்சத்திரம், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திருமயம் சட்டமன்ற உறுப்பினரான திரு. ரகுபதி அவர்களுக்கு நன்றிமற்றும் திருமயம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குத் தகுதியான திமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்யாமல் அதிமுகவிற்குச் சாதகமான உறுப்பினர்களைத் தாரைவார்த்துக் கொடுத்த திருமயம் ஒன்றிய பொறுப்பாளர் அழகு என்கிற சிதம்பரம் அவர்களுக்கும் நன்றி. இவண்; திருமயம் ஒன்றிய குழு கலகத் தொண்டர்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்