மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்....
பேரணாம்பட்டு பகுதியில் நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மணல் கடத்தலை போலீசார்கள் மனது வைத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் முடியாது காரணம். மணல் கடத்தலுக்குக் காரணக்கர்த்தார்களே போலீசார்கள் தான். பேரணாம்ப ட்டில்50 மாட்டுவண்டிகளும், 2011 க்கும் மேற்பட்ட டிராக்டர்களும் மணல் கடத்தலில் தலில் ஈடுபடுத்தப்படுகிறது. து. ஒரு மாட்டு துவண்டிக்கு மாதத்திற்குதலா ரூ.5,000, டிராக்டர் ஒன்றிற்கு வாரத்திற்கு தலா ரூ.10,000 வீதம் போலீசார் லஞ்சமாகப் பெறுவ தாகவும், இந்த லஞ்சப் பணத்தை மணல் கடத்தலில் தாதாவாக விளங்கும் ஓங்குப்பம் ரோட்டில் திருட்டு மணல் விற்றே பலமாடி வீடுகளை கட்டி வரும் சரவணன் என்பவர் தான். போலீசார்களுக்கு கொண்டு சென்று தருவதாகவும்,லஞ்சப்பணத்தை எடுத்துச் செல்லும் சரவணன். மாமியார் வீட்டுக்குச் செல்வது போல் நேரே போலீஸ் நிலையத்திற்குள்ளேயே சென்று போல் அதிகாரிகளை சந்திக்க வெளியே அழைத்து வந்து வசூல் செய்த லஞ்சப் பணத்தைக் கொடுப்பதாகவும், போலீசார்களுக்கு பணத்தை வசூல் செய்து தரும் இதே சரவணன் தான் வருவாய் துறையினருக்கும் லஞ்சப் பணத்தை வசூல் செய்து தருவ தாகவும் பத்தலபல்லியில் மணல் கடத்து வோர்கள் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் க்கும் மாதத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் சென்று சேர்வதாகவும், மசிகம், பத்தலபல்லி என்ற , இரு கிராமங்களுக்கு சுரேஷ்சிகம்வி.ஏ.ஓ.வாக இருப்பதால் வி.ஏ.ஓ. கோபிநாத் வி.ஏ. அளவுக்கு அதிகமான அளவு. லஞ்சப் பணத்தில் ஞ்சப் திளைப்பதாகவும், வி.ஏ.ஓ. ஞ்சப் கோபிநாத் உடுத்து கின்ற உடைகள் கூட லஞ்சப் பணத்தில் வாங்கிய தாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் டிடி மோட்டூர் வி.ஏ.ஓ. ரமேஷ் கூட டிராக்டர்களையும், மாட்டுவண்டிகளையும் திருட்டு மணல் கடத்தவிட்டு லஞ்சம் வாங்குவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஏரிகுத்தி ஏரியில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்பட வேண்டிய மண்ணை , மணல் கடத்தல்காரர்கள் திருடிச் சென்று விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார், குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், பேரணாம்பட்டு தாசில்தார் சி.முருகன் ஆகியோர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அரசு எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் அதை எல்லாம் பெரிதுபடுத்து வதில்லை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகம் தான் மணல் கடத்தல் கும்பல் வேலை எங்கே நடக்கிறது என்று பார்த்தால் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கழனிபாக்கம், கந்தனேரி, இறைவன்காடு, கல்லாங்குத்து, ஆகிய பகுதிகளில் ஆற்று மணல் லாரியில் கடத்தப்படுகிறது. இந்த மணல் எப்படிப்பட்டவர்கள் கடத்தப்படுகிறது என்றால் இதோ ஈச்சங்காடு பாட்டல் சரவணன், பொல்லார சரவணன், வல்லண்டராமம் சரவணன், கார்த்தி விரிஞ் சிபுரம், ராஜேஷ் விரிஞ்சிபுரம், பட்டை விரிஞ்சிபுரம் ஆகியோர் இறைவன்காடு அருகே உள்ள கிராமத்துக்கு கீழ்ப்பக்கம் ஆற்றுக்குப் போகும் வழியில் இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை தினம் தினம் பத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் ஆற்று மணல் இவர்களால் கடத்தப்படுகிறது. கடத்தப்படுகிற ஆற்று மணல் எங்கு செல்கின்றது என்றால் அணைக்கட்டு ஊசூர், சேக்கனூர், அரியூர் போன்ற பகுதிகளிலும் மேலும் ஊசூர் வழியாக தொரப்பாடி பகுதிகளில் செல்போன் மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு மணல் கடத்தப்படுகிறது. இவர்களிடம் யார் வந்து கேட்டாலும் நாங்கள் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பள்ளிகொண்டா காவல் துறைக்கும் தினம் தினம் காலை 10 மணிக்கு ஆட்கள் மூலம் மாமுல் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறோம் என்று கேட்பவர்களிடம் திமிராக பேசுகிறார்கள் இவர்கள் விரிஞ்சிபுரம் கார்த்திக் என்பவரிடம் இதனை பற்றி விசாரித்த போது மாமூல் சரியாக கொடுத்து விடுகிறோம் விரிஞ்சிபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் எங்களுக்கு உதவிகள் செய்கிறார். வேண்டுமானால் அவரை உங்களிடம் பேச வைக்கட்டுமா என்று மிரட்டும் பாணியில் கார்த்தி பேசினார். மேலும் இதோ பாருங்க இது எங்கள் பகுதி எங்கள் கழனி நாங்கள் இப்படித்தான் மணல் கடத்தும் எங்கள் இடத்திற்கு எங்கள் பகுதிக்கு எந்த நிருபர்களும் போகக் கூடாது அப்படிப் போனால் அங்கு என்ன கதி ஆவர்கள் என்று எனக்கு தெரியாது. யாரு உங்களுக்கு தகவல் சொன்னது யார்? என்று எங்களுக்கு தெரியவேண்டும் எங்கள் பகுதியில் எங்கள் நிலத்தின் வழியாக மணல் கடத்தும் உங்களை யார் போய் போட்டோ எடுக்க சொன்னது? எங்க நிலம் வழியாக என்ன வேண்டுமானாலும் செய்வோம்? நடக்கும் மணல் கொள்ளையை யாரும் கண்டு கொள்ளவில்லை நீங்கள் யார் இதைக் கண்டு கொள்ள என்று திமிராக பேசுகிறான் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன். இந்த மணல் கடத்தும் கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நிருபர்களுக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களின் நிலைமை என்ன? என்ன செய்ய போகிறார்கள் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், காவல் துறையும் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்