விளையாட்டு போட்டிகள் நடத்தியதாக போலி கணக்கு கோடிகளில் புரளும் உடற்கல்வி இயக்குநர் ராஜம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர் Dr.ராஜம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளான கபாடி, கைப்பந்து, கால்பந்து, தடகளப் போட்டிகள், கூடைப்பந்து, இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தென்மண்டல அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெறும். போட்டிக்கு முன்பு திட்டமிட்டு நடத்தி முடித்து சரியான விளையாட்டு வீரர்களான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்காக அரசு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஒவ்வொரு போட்டிக்கும் பல் கலைக் கழகங்களுக்கு மட்டும் பல லட் சங்களை செலவிடுகிறது. -ஆனால் (South Zone - level) தென் மண்டல அ ள வி லா ன விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தபின் பு, ஏதோ கணக்கு காட்டும் வகையில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதாக தகவல். மேலும் உடற்கல்வி இயக்குனர் வருடத்திற்கு கோடிக்கணக்கில் ஊழல் செய்தும் கொடைக்கானலில் சொகுசு விடுதியும், பிற இடங்களில் பல லட்சங்களில் சொத்துக்களும் வாங்கியுள்ளதாக அப்பகுதியில் ஒரு பேச்சு. -சரி அப்படி என்னதான் வருமானம் என்று பார்க்க களமிறங்கி விசாரித்தால்! இந்தனை லட்சங்கள் புரளுகிறதா? என நமக்கே ஆச்சர்யம். -ஆம் ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளுக்கும் UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு வருடத்திற்கு 3 முதல் 4 லட்சம் வரை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக உடற்கல்வி துறைக்கு ஒதுக்கியுள்ளதாம். அதன்படி ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளையும் திட்டமிட்டு நடத்துவதற்கு ஆண்டின் முதல் பகுதியில் அனைத்து கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் என்று சொல்லக்கூடிய மினிட்ஸ்ல் பதிவு செய்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமலேயே நடத்தியதாக கணக்கெழுதி கொள்ளை அடிப்பார்களாம். - அதன்படி கடந்த ஆண்டு 18.02.2019 ல் இது போன்று மினிட்ஸ் தயாரிக்கப்பட்டு அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் வழக்கம் போல் தனது கைவரிசையை காட்டியுள்ளாராம். கூடுதலாக 9 ஆண்டுகளில் தனது சம்பளத்தை விட பல லட்சங்கள் ஏமாற்றியுள்ளாராம். இவ்வாறு இவர் அரசு பணத்தை கொள்ளை அடிப்பதால் விளையாட்டு வீரர்களின் தேசிய, உலக அளவில் தங்களது கனவு கருகிவிடுவதாக சொல்லப்படுகிறது. தென்மண்டல போட்டிகள் முடிந்த பின்பு இவர் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியை நடத்துவதால் Form-3 என்று சொல்லக்கூடிய படிவம் 3 சான்றிதழை கூட பெற முடியாத சூழ்நிலையில் கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் உள்ளனர். அது போகட்டுங்க இவர் யோகாவில் மட்டும் PhD பெற்றதனால் தான் என்னவோ விளையாட்டு வீரர்களின் வாழ்வாதாரம் பற்றி தெரியவில்லை போலும் எத்தனையோ விளையாட்டு வீரர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களை தனது சொந்த சுயலாபத்திற்க்காக அழித்த உடற்கல்வி இயக்குனர் டாக்டர் ராஜம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. பூனைக்கு யார் தான் மணி கட்டுவார்கள் என பொறுத்திருப்போம். மக்களோடு மக்களாக! 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்