100 நாள் வேலைத் திட்டத்தில் 4,200 கோடி ஊழல்அதிர்ச்சி கொடுத்த ஆர்.டி.ஐ தகவல்

100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது.


தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கிய நிதியிலிருந்து 4,200 கோடிக்கும் மேல் இமாலய ஊழல் நடந்துள்ளது சமூகத் தணிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்று வெளியே கொண்டு வந்திருக்கிறார் இராசிபுரத்தைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜீ .


 'இந்தியாவில் ஏழைகள், வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள், பட்டியலின, பழங்குடி மக்களின் நல்வாழ்விற்காகவும் பொருளாதார மேம்பாடு அடையவும் கிராமங்கள் தன்னிறைவு அடையவும் மகாத்மா காந்தி அடையவும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது.


மேற்படி இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கும் நிதி நேரடியாகக் கிராம மக்களுக்குச் சென்றடைகின்றது. இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 100 சதவிகிதம் மனித சக்தியைமட்டும் பயன்படுத்திக் கட்டடங்கள் கட்டுதல், ஏரி, குளம், குட்டை , ஓடை, கண்மாய் போன்ற நீர் நிலைகளைத் தூர் வாருதல் மற்றும் தனிநபர் இடங்களில் கால்நடை கொட்டகை அமைத்தல், விவசாய நிலங்களில் விவசாய வேலை செய்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், மரம் நடுதல், கழிவறை கட்டுதல் போன்ற வேலைகள் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


இந்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன் கிராம மக்கள் சமூகத் தணிக்கை மூலமாக ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு செய்து சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மேற்படி பணிகள் நிலவரம் குறித்து வாதங்கள் செய்து ஒப்புதல் வழங்குவார்கள். சமூகத் தணிக்கையில் மேற்படி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சமூகத் தணிக்கையாளர் மற்றும் கிராமத் தன்னார்வளர்கள் ஒவ்வொரு வேலையையும் பயனாளிகளையும் 100 சதவிகிதம் ஆய்வு செய்து குறைகளையும் நிறைகளையும் சிறப்பு கிராம சபை மூலமாகப் பொதுமக்கள் பார்வைக்கு முன் வைப்பார்கள். இப்படி நடைபெற்று வரும் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் 2017 முதல் 2020 வரை செய்யப்பட்ட பணிகளில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளது சமூகத் தணிக்கை மூலம் கண்டறியப்பட்டது.


சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3 ஆண்டுகளில் கிராமப் புற வேலைத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கிய நிதியிலிருந்து 4,200 கோடிக்கும் மேலாக முறைகேடு நடந்துள்ளது. காடு வளர்ப்பு மற்றும் மரங்கள் வளர்ப்பில் 10 மரங்களை நட்டு விட்டு 1,000 மரங்கள் நட்டதாகவும், அதே மரங்கள் வறட்சியாலும் கால்நடைகளாலும் அழிந்துவிட்டதாகவும், சிறிய பண்ணைக் குட்டையைக் கட்டி விட்டு பெரிய குட்டைக் கட்டியதாக மோசடி செய்தல், ஏரி, குளம், குட்டை, ஓடை ஆகியவற்றைத் தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி கரையைப் பலப்படுத்தியதாகவும் என இவ்வாறான தவறான கணக்கு காட்டியிருக்கிறார்கள்.


*100 நாள் வேலைத் திட்டத்தில் 4,200 கோடி ஊழல்?!' அதிர்ச்சி கொடுத்த ஆர்.டி.ஐ தகவல்


100 நாள் வேலைத் திட்டத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி வேலை செய்து விட்டு மனித சக்தியைப் பயன்படுத்தி வேலை செய்ததாகப் போலி ஆவணங்கள் தயார் செய்து நிதியைப் பயன்படுத்துதல், போலியான பயனாளிகள் பெயரில் நிதியைப் பயன்படுத்துதல், கற்பனையான வேலைகளின் பெயரில் நிதியைப் பயன்படுத்துதல், குறைவான ஆட்களைப் பயன்படுத்தி விட்டு அதிக ஆட்கள் பெயரில் போலிக் கணக்கு தயார் செய்து நிதியைப் பயன்படுத்துதல் போன்ற வகைகளில் மேற்படி முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. இதற்கான நகல் ஒவ்வோர் ஊராட்சியிலும் இருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அந்த நகல்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்'' என இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்