எம்.ஜி.ஆரை நிறம் மற்றும்... மிரட்டிய ஆர்எஸ்எஸ்....

திருவள்ளுவர் சிலைக்கு காவி அடித்து நெற்றியில் பட்டையடித்தது போல் "MGRன் வெள்ளை சட்டைக்கு காவி அடித்த" வெறியர்கள்.


*எம்.ஜி.ஆரை மிரட்டிய ஆர்எஸ்எஸ்.


டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர். கூறிய செய்திகள் பின்வருமாறு:-


*பத்திரிக்கையாளர் கேள்வி:*


*ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா?*


MGR- ன் பதில்.


டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகை யில் இருந்து மத்திய மந்திரிகளை பார்க்க புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் பலர் என் முன்னால் நின்று கொண்டு,தமிழ்நாட்டில் 5 RSSகாரர்கள் சுடப்பட்டதாக சொன்னார்கள்.எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோஷம் போட்டார்கள்.


அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இது தான் RSS இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.


இது தான் ஆர்.எஸ்.எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும்,தமிழ் நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராது.என்னை தடை செய்யும் அளவிற்கு மட்டமாக நடந்து கொண்டார்கள்.இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றி விடமுடியாது.


தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்தரமான அனுபவம் எனக்கு இது வரை நடந்ததில்லை.இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது"என்றார் எம்.ஜி.ஆர்.


*பாஜக - அதிமுக கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி தான்..கொள்கை கூட்டணி அல்ல*


*ஆனால்,இதுவரை எம்.ஜி.ஆர்.பக்தன்,அம்மாவின் விசுவாசி என்று தங்களை பறைசாற்றிக் கொண்டவர்கள்*


*முழுசாகவே.. "சந்திரமுகி" ஆகிவிட்டனர்..பாஜக காரர்களைவிட... ஆர்.எஸ்.எஸ்.காரர்களைவிட ஓவராக கூவுகிறார்கள்*


*தலைவர் சிலையில் அவரின் சட்டைக்கு காவி கலர் பூசி உள்ளனர் என்று சொன்னால்.. நேற்றுவரை எம்.ஜி.ஆர் பக்தர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் சொல்கிறார்*


*தலைவருக்கு இந்த கலர் சூப்பரா (!) இருக்கு என்று..*


*இன்னொருவர் சொல்கிறார்..அந்த வண்ணம் பூசியவர் திமுககாரர் என்றும்.அவரை போலீஸ் தேடுகிறது என்றும் கூறுகிறார்*


*இப்படி வண்ணாந்துறையில் "பாவடை" காணாமல் போனாலும்.. அதற்கு திமுக தான் என்று கூறிக் கொண்டு இருங்கள்*


*உங்கள் கோவணத்தையும் சேர்த்து.. பாஜககாரன் உருவிக் கொண்டிருக்கிறான்*


*உங்கள் காலடியில் மண் அரித்துக் கொண்டிருக்கிறது..அது தெரியாமல் "சந்திரமுகி " ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்*


*வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வேண்டாம் என்று "முதல்வர்" முடிவெடுத்தால் அடுத்த நிமிடம் அவர் வீட்டிலும் ரெய்டு நடக்கும்*


*அப்போது இந்த "சந்திரமுகி" கள் என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை*


*காகிதம் ராஜன்*


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்