“குடியுரிமை பாதுகாப்பு மாநாடு” - மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு!

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக சென்னையில் " குடியுரிமை பாதுகாப்பு மாநாடு" இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிவற்றின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், "தமிழக மக்கள் ஒற்றுமை மேடை" சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று நடைபெறுகிறது.


சென்னை ராயப்பேட்டை YMCA திடலில் மாலை 4.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, குழுமத்தின் என்.ராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்ற உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்