முதல்வர் காலில் குழந்தையுடன் விழுந்து கதறியழுத பெண்...
திருப்பதியில் குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:
அவர் பேசும்போது சொன்னதாவது: ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பதிவு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தார் பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அங்கிருந்து சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டார்.
காட்பாடி செங்குட்டை பகுதியில் முதலமைச்சரை வரவேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர், அங்கிருந்த தொண்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
காட்பாடி செங்குட்டை பகுதியில் முதலமைச்சரை வரவேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர், அங்கிருந்த தொண்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலில் ஒரு பெண் ஓடிவந்து விழுந்து கதறினார்.
உதவித் தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று அந்த பெண் கண்ணீருடன் கூறினார்.
தன் பெயர் அனிதா என்றும், தன் கணவர் வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ ஆக வேலை பார்த்தவர், கடந்த 2013 ல் உயிரிழந்துவிட்டார், ஆனால் அதற்கான ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை.
எப்படியாவது உதவித்தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று முதல்வரை அந்த பெண் கேட்டுக் கொண்டார். மேலும் கையில் வைத்திருந்த அந்த புகார் மனுவையும் அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடியார், - கொண்ட முதல்வர் எடப்பாடியார், நிச்சயமாக உதவித்தொகைக்கு ஆவன செய்வதாக அந்த பெண்ணிடம் உறுதி அளித்தார்.
முதல்வர் வரும் வழியில் திடீரென அந்த பெண் காலில் விழுந்த சம்பவம் காட்பாடியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.