பாசிசத்தை எல்லோரும் எதிர்க்க வேண்டும் - சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்
நாடு முழுவதும் இப்போது சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், மாண வர்கள் என எல்லாத் தரப்பினரும் இச்சட் டங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலி என பல்வேறு விதங்களில் போரா டிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட் டங்களில் மாணவ மாணவியரின் பங்களிப்பு மிக முக்கியமானது.
தாங்கள் நீண்ட காலமாக கனவு கண்டு அடைந்த ஐஏஎஸ் பதவியைக்கூட துறந்து விட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்த அதிகாரிகளின் பட்டியலும் நீளுகிறது. அவர்களில் ஒருவர்தாம் தமிழகத்தைச் சார்ந்த திரு.சசிகாந்த் செந்தில் அவர்கள். 2009 ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 9ஆம் இடத்தையும் பெற்று, பல்வேறு பொறுப்பு களை வகித்தவர்.
7.2.2020 அன்று மாலை 7 மணிக்கு சென்னையில் காணி நிலம், Ek Potlee Rethkee, Young People for Politics ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், பாசிசம் பற்றி தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் சசிகாந்த் செந்தில்.
பாசிசம் வளருவதற்கும், அதன் பரப்பு ரைகள் வெற்றி பெறுவதற்கும் ஜனநாயகம் தான் அடித்தளமாக உள்ளது. ஏனென்றால், பொய்ப் பரப்புரை செய்வதற்கு அங்குதான் வாய்ப்புகள் உள்ளன. எல்லா இடங்களிலும் பாசிசம், ஜனநாயகத்தைப் பயன்படுத்தித் தான் ஆட்சிக்கு வந்துள்ளன. எடுத்துக்காட் டாக, ஜெர்மனியில் ஹிட்லர் வாக்குச்சீட்டு மூலம்தான் ஆட்சியைப் பிடித்தான்.
பாசிசம் மிகவும் அறிவுக்கூர்மை கொண் டது. அதன் பிடிக்குள் அகப்பட்டு விட்டால், வெளியே வருவது மிகக் கடினமானது.
அஸ்ஸாமில் என்ஆர்சியை நடை முறைப்படுத்தியதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அது தேவையில்லை. இங்கு குடியேறியவர்கள் சட்டவிரோதமான முறையில் குடியேறி இருந்தால், அதனைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண் டிய பொறுப்பு அரசாங்கத்துடையது. இதற்காக 130 கோடி மக்களும் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்பது முட்டாள்தனமானது. எடுத்துக் காட்டாக, ஒரு திருடன் திருடிவிட்டான் எனில், அந்தத் திருடனைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமே தவிர, எல்லாரும் தாமாக முன்வந்து தாங்கள் திருடர்கள் அல்லர் என நிரூபிக்கச் சொல்வது எப்படி முட்டாள்தனமானதோ அதைப்போன்றது தான் இதுவும்.
பாசிசத்தால் முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிப்பில்லை. நாளை கிறித்தவர்கள், தலித்துகள் என அனைவருமே பாதிக்கப்படு வார்கள். எனவே இதனை எல்லாரும் எதிர்க்க வேண்டும். ஜெர்மனியின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அன்று யூதர்கள் தாக்கப்பட்டபோது ஜெர்மன் மக்கள் அதனை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. வரலாற்று ஏடுகளில் அவர்கள் ஏன் தட்டிக் கேட்கவில்லை? என்ற குற்றத்துக்கு ஆளாகி யுள்ளனர். அந்த நிலை நமக்கும் வரக்கூடாது. அரசு தவறு செய்தால் நாமும் தட்டிக்கேட்க வேண்டும்.
பாசிசத்தின் திட்டம் என்னவெனில், மக்களை மக்களுடன் மோதச் செய்வ தாகும். 1975ஆம் ஆண்டில் இந்தியாவில் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, இங்கும் மோசமான நிலை இருந்தது. ஆனால் மக்கள் அதனை எதிர்த்தனர். அவர்கள் அரசைத்தான் எதிர்த்தனர். யாரை எதிர்ப்பது என்பது பற்றி மக்கள் நன்றாக அறிவர். அவர்களுக்கு முன்னால் ஒரு சர்வாதிகார ஆட்சி இருந்தது. எனவே அதனை எதிர்த்தார்கள்.
இப்போதுள்ள சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இப்போதுள்ள ஆட்சி பாசிச ஆட்சியாக உள்ளது. இங்குள்ள மக்களை, மக்களுடன் மோதவிட வேண்டும் என்றே அது விரும்புகிறது. இந்து - முஸ்லிம் மோதல் என்றோ, பெரும்பான்மை - சிறுபான்மை என்றோ அவர்கள் நேரடியாகப் பேசுவதில்லை . தேசம், தேசியவாதம் - முஸ்லிம்கள் என்றுதான் முன்னிறுத்து கின்றனர். தேசியவாதம் என்று அவர்கள் குறிப்பிடுவது, அவர்களின் இரகசிய திட்டங்களையும் கொள்கைகளையும் தான். யார் அதை ஏற்கவில்லையோ அவர்கள் தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுவார்கள். இப்படிச் சொல்லி சொல்லி சலிப்படைந்துவிட்டால் பாகிஸ் தானுக்குச் சென்றுவிடுங்கள் என்பார்கள்.
பாசிசத்தை எல்லாரும் எதிர்க்க வேண்டும். இது எல்லாருடைய கடமை யாகவும் இருக்கிறது. இந்த எதிர்ப்பில் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. முஸ்லிம்கள் முறையாகவும், ஓர் ஒழுங்குடனும், பெரும்திரளாகவும், தங்களின் கைகளில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏந்தியும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர். தங்களின் கைகளில் அமைப்புச் சட்டத்தை ஏந்தி நிற்கின்றனர்.
அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை எல்லா இடங்களிலும் வாசித்துக் காட்டுகின்றனர். இன்னும் வியப்பு என்னவென்றால், 'ஜெய்பீம்' என்று முழங்குகிறார்கள். இப்படிப் பட்ட எதிர்ப்பை பாசிச அரசு எதிர்பார்க்க வில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முஸ்லிம்களின் தியாகங்களும் அதிகமாக உள்ளன.
எனவே இந்தத் தருணத்தில் நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். பாசிச அரசின் நடவடிக் கையை அனைத்துத் தரப்பினரும் எதிர்க்க வேண்டும். கடந்கரையில் நிற்கிறபோது திடீரென சுனாமி வந்துவிட்டால், நம்மை மட்டுமல்ல, பிறரையும் காப்பற்றத் துடிக்கும் உள்ளங்கள் தேவை. எதிர்ப்பு சிறிய அளவில் இருந்தாலும்கூட, கண்டிப்பாக இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை, இலக்கியம், திரைப்படம் என எந்தெந்த வடிவங்களில் எதிர்ப்பை பதிவு செய்ய முடியுமோ அவை அனைத்தையும் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.