நமக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஓசியில் கிடைத்தது என்கிறோம். ஓசி என்ற சொல் எப்படி வந்தது..

முதன் முதலாக 1764 இல் சென்னை மும்பை மற்றும் கல்கத்தாவில் அப்போதைய கவர்னர் வாரன் ஹேஸ்டிங் என்பவரால் தபால் நிலையங்கள் தொடங்கப்பட்டது.


இந்தியாவில் இருந்து இங்கிலாந்து அரசாங்கக் கடிதங்களும் ஆவணங்களும் மற்ற கோப்புகளும் தபால் மூலமாக கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது.


இதில் ஒவ்வொரு கடிதத்திலும் தபால்தலைகளை கடிதத்தின் எடைக்கேற்ப மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது. இங்கே இருக்கும் ஆங்கிலேய அரசிடமிருந்து இங்கிலாந்தில் இருக்கும் தலைமை அரசாங்கத்திற்கு எதற்காக வீண் செலவு என்று யோசித்த ஆங்கில அரசு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது.


அதாவது அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்துகளில் தபால்தலைகளை ஒட்டி வீண் செலவு செய்வதை தவிர்ப்பதற்காக அக்கடிதங்களில் OCS (on company service) என்று அச்சிட்டு கட்டணமின்றி அனுப்பப்பட்டது.


அதாவது OCS என்றால் பணம் செலவு செய்யாமல் கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாட்களில் தெரியவந்ததைத் தொடர்ந்து ஓ சி எஸ் என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமடைந்தது. காலப்போக்கில் ஓ சி எஸ் என்ற வார்த்தை ஓசி எனச் சுருங்கியது.


அதன் பிறகு எவரேனும் இலவசமாகப் பணம் ஏதும் கொடுக்காமல் பொருட்களை வாங்கினால் அவரை ஓசி என்று அழைக்கும் பழக்கம் வந்தது. OCS இன்றும் இந்திய அரசுத் துறைகளில் இருந்து அனுப்பப்படும் தபாலில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


இப்போது அதன் பெயர் IGS Only (Indian government service only)


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்