The Rise முழக்கம் நமக்கு நாமே விடுக்கும் அறைகூவல்
“எல்லோருக்கும் வாழ்க்கை” என்ற எழுமின் – The Rise முழக்கம் நமக்கு நாமே விடுக்கும் அறைகூவல். ஒரு கோடி படித்த இளையர்கள் வேலையின்றித் தவிக்கும் நெருக்கடியான காலத்தில் ஒரு இனமாக நாம் இணைந்து நின்று நம் இளையர்களுக்கு வாழ்வு தேடும் தமிழ்ப் பெருங்கனவு.
மார்ச் 22 வேலைவாய்ப்பு முகாம் தொடங்குகிறோம், நம் அண்பினிய ஐயா ஜலீல் அவர்களின் மதுரை சேது கல்லூரியில். இந்த முகாமில் 2500 வேலைகள் இலக்கு. மதிப்பிற்குரிய பல நிறுவனங்கள் பங்கேற்க இசைந்துள்ளன. தொழில் முனைதல் இயக்கமும் தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் வெவ்வேறு நகரங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் / தொழில் முனைதல் பயிற்சிகள் நடைபெறும்.
உங்கள் உதவி வேண்டும்:
1.எங்கு ஒரு வேலை வாய்ப்பு தென்பட்டாலும் உடனடியாக அத் தகவலை info@aramhr.com மின் அஞ்சலுக்குத் தெரிவித்து அதனை ஒரு தமிழ்ப் பிள்ளைக்கு உரியதாக மாற்றுங்கள்.
2.நீங்கள் தொழில் நிறுவனம் நடத்துவதாக இருந்தால் , பணியாட்கள் தேவைப்படின் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வாருங்கள்.
3. உங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களை இம் முகாமில் பங்கேற்க ஊக்குவியுங்கள்.
நன்றி
தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பார்
நிறுவனர், எழுமின் - The Rise அமைப்பு.