திருந்தமாட்டார்கள்! எம்.பி., மகன் திருமணத்திற்கு சாலையில் வரவேற்பு வளைவு.
தஞ்சாவூர் : ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம் மகன் திருமணத்திற்கு, சாலையின் நடுவே குழி தோண்டி, வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை , பள்ளிக்கரணையில், அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், சாலை நடுவே வைத்த, 'பிளக்ஸ் பேனர்' விழுந்த விபத்தில், சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். இதையடுத்து, சாலையில் பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவு அமைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜ்யசபா, எம்.பி.,யும், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா, நாளை(பிப்.,26) தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர்.
இவர்களை வரவேற்கும் விதமாக, திருச்சி - தஞ்சாவூர் சாலையின் நடுவே, குழி தோண்டி, அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அதிகமுள்ள பிரதான சாலையில், அலங்கார வளைவுகள் அமைத்துள்ளனர். இதனால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு என, அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.