உள்ளுக்குள் விபச்சார ஆண்டி!! வெளியில் அரசியல்வாதி !

திருப்பத்தூர் மாவட்டம் அம்பூரை அடுத்துள்ள உமராபாத் பகுதி வேப்பமரத் தெருவில் நேற்று 30.01.2020 இரவு பெண்கள் சிலர் சண்டையிட்டுக் கொள்வதாக ஒரு சிறுமி அவசர போலீஸ் உதவி எண் 100க்கு போன் செய்துள்ளார். அதில் தன்னை காப்பாற்றும்படி கதறி இருக்கிறார்.


இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சண்டையில் ஈடுபட்டிருந்த லதா மற்றும் பிரேமா என்கிற பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.


அப்போது உண்மைகள் அம்பலமானது. லதா என்பவர் தன்னுடைய 17வயது மகளை உமராபாத் வேப்பமரத்தெருவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி பிரேமாவிடம் பாலியல் தொழிலுக்காக குத்தகைவிட்டாராம். நாளொன்றுக்கு நான்காயிரம் ரூபாய் என்று விலை பேசப்பட்டிருக்கிறது.


ஆனால் பிரேமா லதாவிடம் பேசியபடிஅது தொகையை கொடுக்கவில்லையாம். இந்த காரணத்தாலேயே சண்டையிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பெண் போலீசார் விசாரித்தனர்.


தன்னை கர்நாடக மாநிலம் பெங்களுரூ, எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ளபியூட்டி பார்லரில் லஷ்மி என்பவர் சந்தித்தார். அவர் காட்பாடியை சேர்ந்தவர். அவரிடம் என்னுடைய அம்மா லதா எங்க குடும்ப கஷ்டமெல்லாம் கூறினார்.


ஒன்னரை லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக சொன்னார். அதையெல்லாம் கேட்டுக்கொண்ட லஷ்மி, நீ ஒன்னும் பயப்படாதே! ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு வருமானம் கிடைக்கிற மாதிரி வழி செய்கிறேன்.


ஆனால் உன் மகளை ஆம்பூர் அருகே உள்ள பிரேமாவிடம் கொண்டு விடுவேன். அவுங்க நல்ல சாப்பாடு, துணி மணியெல்லாம் கொடுத்து கவனித்துக் கொள்வார் என்று கூறினார்.


ஒப்புக்கொண்ட எங்க அம்மாவும், என்னை லஷ்மியிடம் ஒப்படைக்க, லஷ்மி என்னை ஆம்பூர் பிரேமா ஆண்டியிடம் சேர்த்தார். அங்கு அந்த ஆண்டி பல ஆம்பளைகளுடன் தவறாக இருக்க சொன்னார்.


பேசியபடிஅது எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே அங்கிருந்து தப்ப முயன்றேன் ஆனால் முடியவில்லை என்று போலிசில் சிறுமி கதறியுள்ளார்.


இதுகுறித்து போலீசார் மேலும் விசாரிக்கையில், வாணியம்பாடியைச் சேர்ந்த பிரபல விபச்சார புரோக்கர் யேஜாஸ் என்பவனிடம் சிறுமியை நல்ல தொகைக்கு பேசி அனுப்பி வைத்திருக்கிறார் பிரேமா. இது நடந்தது பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. புரோக்கர் யேஜாஸ் சிறுமியை காரில் கடத்திக்கொண்டு ஏலகிரிமலை கொண்டுபோய் அங்கு சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார்.


தங்க வைத்துள்ளார். அங்கு பல மனித மிருகங்களுடன் சேர்த்து வைத்திருக்கிறார் புரோக்கர் யேஜாஸ். தினமும் நரக வேதனைதான். அப்படியே பத்து நாட்கள் கடந்துள்ளது. ஆனால் பணம் ஏதும் தரவில்லையாம். ஒரு நாளைக்கு நான்காயிரம் ரூபாய் என பத்து நாளைக்கு நாற்பதாயிரம் பாக்கியாம்.


பின்னர் பிரேமாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார் சிறுமி. அப்போது கதறிய சிறுமி, ஆண்டி என்னை விட்டுவிடுங்கள் நான் ஊருக்கு போகிறேன். பணம் கூட தேவையில்லை என்று கதறியிருகிறாள், கெஞ்சி இருக்கிறாள். அப்போதும் பிரேமா மனம் இறங்கவில்லை.


இது ஒருபுறமிருக்க தன் மகளிடமிருந்து பணமும் வரவில்லை, எந்த தகவலுமில்லையே என்று யோசித்த சிறுமியின் தாய் அதை குறித்து விசாரிக்கவே ஆம்பூர் வந்து உமராபாத்தில் பிரேமாவிடம் சண்டையிட்டிருக்கிறார்.


"ஒரு தாய் மகளின் நிலையை பார்த்த பின் அலறி துடித்து உடன் கூட்டிச் செல்லாமல் "பேலன்ஸ் அமௌன்ட்” கேட்டு வீதியில் சண்டையிட்டது அக்கம்பக்கத்தாரை கொந்தளிக்கவைத்தது”. இந்நிலையில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் பெற்ற மகளை விபச்சாரத்துக்கு விற்ற பே(தா) ய் லதாவவையும், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக அரசியல்வாதி ஆண்டி பிரேமாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்தப் பிணம் தின்னி கழுகுகளிடம் சிக்கி போலீசாரால் மீட்க்கப்பட்ட சிறுமி திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவளுக்கு முதலுதவி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடாகியுள்ளது.


இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் புரோக்கர் காட்பாடி லட்சுமி கைதேர்ந்த புரோக்கர் என்று கூறப்படுகிறது. இவளும் வாணியம்பாடி புரோக்கர் யேஜாஸ் உள்ளிட்டோர் தற்போது தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.


இதில் யேஜாஸ் என்பவன் ஏற்கனவே இரண்டு மூன்று முறை விபச்சார வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பியவன். அப்படியிருந்தும் மீண்டும் மீண்டும் அவன் அதே தொழில் ஈடுபட்டு வருகிறான்.


யேஜாஸ் ஏலகிரி மலைக்கு சிறுமியைஇதனால் கடத்திச் சென்று பல்வேறு வி.ஐ.பி.களுக்கு படையல் போட்டானாம். அதில் ஒரு முக்கிய அதிகார வட்டம் கூட இருந்ததாக கூறப்படுகிறது. "பிரேமாவை பொருத்தவரை அ.தி.மு.க.வில் மாவட்ட பிரதிநிதியாகவும், உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் பணியில் இருந்தவர்.


இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ஆகும். இவர் ஊரில் பெரிய மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு சிறுமிகளை சப்ளை செய்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார்.


இந்த விஷயம் அரசல்புரசலாக அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்திருக்கிறது. உள்ளூர விபச்சார ஆண்டியாகவும், வெளியில் அரசியல்வாதி மற்றும் கூட்டுறவு சங்க தலைவராகவும் பந்தாவாக வலம் வந்தார் பிரேமா.


சிறுமியைஇதனால் அவரது தவறான நடவடிக்கைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் பல நாள் திருடி இன்னைக்கு மாட்டிகிட்டா என்கிறார்கள் மக்கள்.”


மேலும் எதிரிகளை பிடிக்க அமைக்கப்பட்டு இருக்கும் தனிப்படை போலீஸ் பெங்களூருவில் உள்ள பியூட்டி பார்லர், ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதி ஆகியவற்றுக்கு சென்று விசாரனை மேற்கொள்ள உள்ளனர்.


கூடவே ஆம்பூர் டி.எஸ்.பி.சச்சிதானந்தம், உமராபாத் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் அதிகாரிகளை பாராட்டி நன்றி சொல்லிக்கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்