மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி: மாணவர்கள் மூலம் அமைக்கப்பட்ட அப்துல்கலாம் முகம்
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கடலூரில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் முகத்தோற்றத்தை ஏற்படுத்தினர்.
மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் வகையிலும், கடலூரைச் சேர்ந்த 'சிம்பிள் டிரஸ்ட்' எனும் அமைப்பு, 'மரமும் மாற்றமும்' என்ற தலைப்பில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, நேற்று (பிப்.23) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் கைகளில் தேசியக்கொடி வண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலூன்களை ஏந்தியபடி,முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் முகம் தோன்றும் வகையில் அமர்ந்து காட்சியளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 500 பேருக்கு விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.