துபாயிலிருந்து வந்த 155 பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை: துபாயிலிருந்து மதுரைக்கு வந்த 155 பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான முத்திரையிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. அதற்கு ஈடு செய்யும் வகையில் சுகாதாரத் துறையினரும் படுவேகமாக செயல்பட்டு கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கையில் ஸ்கேனர்.. காதுல செல்போன்.. இப்படிப்பட்ட சோம்பேறி இருந்தா.. கொரோனா எப்படி ஒழியும்?


தனிமைப்படுத்தும் மையம்
24 மணி நேரமும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வருவோரை சோதனை செய்து வருகிறார்கள். அவ்வாறு வருவோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது. ஒரு வேளை அந்த பயணிக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.


முத்திரை
ஒருவேளை அது போன்ற அறிகுறி ஏதும் இல்லாவிட்டால், அவர்களது கையில் முத்திரை குத்தப்படுகிறது. அதாவது கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கம் ஒருவருக்கு தாமதமாக கூட அறிகுறியை காட்டும் என்பதால் அவர்கள் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மேலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்பதற்கான முத்திரை கையில் அடித்து விடுகிறார்கள்.


சுகாதாரத் துறையினர்
இது அந்தந்த மாநிலங்களுக்கேற்ப ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முத்திரை இடம்பெறுகிறது. அதன்படி 2 குழந்தைகள் உள்பட துபாயிலிருந்து வந்த 155 பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.


அப்போது பயணிகளுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. எனினும் அந்த 155 பேரும் குறிப்பிட்ட தினங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


முத்திரையில் என்ன?
இதற்காக அவர்களின் கைகளில் முத்திரையிடப்பட்டது. அதில் "தமிழக மக்களை பாதுகாப்பதில் பெருமிதம் அடைகிறேன். ஏப்ரல் 17-ஆம் தேதி வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வேன்" என அச்சடித்துள்ளனர்.


இதனால் இந்த முத்திரை பதிக்கப்பட்ட 155 பேரும் மக்கள் கூடும் இடங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்