இந்தியாவில் இறந்த 3 மாத மகனை பார்க்க மஸ்கட்டில் இருந்து கண்ணீர் விடும் தந்தை
மஸ்கட்டில் இருக்கும் தந்தை ஒருவர் இந்தியாவில் மரணம் அடைந்த தனது 3 மாத மகனை கடைசியாக ஒருமுறை பார்க்க உதவி செய்யும்படி அழுதுகொண்டே டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் வீடியோவை பார்க்கும்போது கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவில் உள்ள பிதாபுரம் என்ற இடத்தில் தனது மூன்று மாத மகன் இறந்து விட்டதாகவும் ஆனால் தான் இப்போது மஸ்கட்டில் இருப்பதால் தனது மகனின் முகத்தை கடைசியாக பார்க்க கூட தன்னால் முடியவில்லை என்றும்
எந்தவித விமான போக்குவரத்தும் இல்லாததால் தன்னால் இந்தியாவுக்கு வர முடியவில்லை என்றும் தனது மகனை கடைசியாக ஒருமுறை பார்க்க பிரதமர் மோடி தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அழுது கொண்டே அவர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் எந்த பகுதியில் இருந்தும் இந்தியாவுக்கு வர தற்போது எந்த விமானங்களும் இயங்கவில்லை என்றாலும் இந்த தந்தையின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஏதாவது செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.