ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடினால் ஓராண்டு சிறை தண்டனை
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி, வீதிகளில் நடமாடுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரை பற்றி கவலைப்படாமல், புதுச்சேரி மக்கள் வெளியே நடமாடுவதாக
கவலை தெரிவித்தார்.
அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், தேவைப் பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும் என்றார்.
மருந்தகம் தவிர, அனைத்து கடைகளும் நாளை முதல் 31 ம் தேதி வரை முழுமையாக மூடப்படும் என்றும் அவர் கூறினார். அதேநேரம் புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றும் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.