கடவுள் உள்ளமே கருணை இல்லமே ..!அசத்தும் அன்னதான பிரபுக்கள்

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், சென்னையில் உணவின்றி தவிப்போருக்கு, உதவும் வகையில் பெயர் சொல்ல விரும்பாத சிலர் வீட்டில் உணவு தயாரித்து வீதி வீதியாக சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். 


கொரோனா பரவலை தடுக்கும் நோக்கோடு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தினக்கூலியை மட்டுமே நம்பி இருந்த ஏழை எளிய மற்றும் வீடில்லாத விழிம்பு நிலை மனிதர்கள் பலர் பட்டினியால் தவித்து வருவதை பார்த்த சிலர் உணவு வழங்கி வருகின்றனர்.


கையேந்த வெட்கப்பட்டு பசியை மறைக்கும் இத்தகைய மனிதர்களுக்கும் மக்களுக்கு சேவையாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் சில நல்ல உள்ளம் கொண்ட அன்னதான பிரபுக்கள் வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து உணவை சமைத்து பாக்கெட்டுகளில் அடைத்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று சத்தமில்லாமல் வழங்கி வருகின்றனர்.


உணவுப்பொட்டலங்களை பெற தயங்கும் சில ஏழை குடும்பத்தினருக்கு சமையலுக்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் நீணட நேரம் தாக்கு பிடிக்ககூடிய லெமன் சாதம் மற்றும் தக்காளி சாதம் போன்ற உணவுகள் பொட்டலமாக வழங்கப்படுகின்றது


வீட்டில் தங்காளி சாதத்தை தயாரித்து அதனை வாழை இலையில் பொட்டலம் போட்டு தாயுள்ளத்தோடு தயாரித்து வழங்கி வருகின்றனர் பெயர் சொல்ல விரும்பாத நல்ல உள்ளங்கள்..


சென்னை குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உணவு தேவைப்படுவோர் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது


உதவி செய்ய வேண்டும் என்பதற்காக இருப்பவர்கள் எல்லாம் உணவு பொட்டலத்தோடு அன்னதானம் செய்ய வெளியில் புறப்பட்டுவிட வேண்டாம். அது வீணான பிரச்சனைகளை உருவாக்கிவிடும், அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே


முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை நிதியாக அள்ளிக்கொடுத்தால் அரசு மேற்கொள்ளும் நிவாரண பணிகளுக்கு பேருதவியாக இருக்கும்..!  கருணை உள்ளமே கடவுள் வாழும் இல்லம் என்பதை உணர்ந்து அனைவரும் அரசுக்கு உதவுவோம்..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்