காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடக்கும் அட்டுழியங்கள்
காஞ்சிபுரம் பிரசவம் வார்டில் சமீபத்தில் எனது தங்கைக்கு குழந்தை பிறந்தது.... அப்போது மருத்துவமனையில் பணி புரியும் ஊழியர்கள் 15பேருக்கு காபி வாங்கி கொடுங்கள், பிஸ்கட், வாங்கி கொடுங்கள் என்றார்கள்....
பிரசவத்தின் போது சிறிய துண்டுகள்(TOWEL) தேவைபடுவதால் அதை வாங்க சொல்கிறார்கள்... ஆனால் 2 அல்லது 3 துண்டுகள் தேவை படும் இடத்தில் 10 துண்டுகள் கேட்கிறார்கள்.
மேலும் செக்யூரிட்டிக்கு 200 ரூபாய் கேட்கிறார்கள்.கழிவுகளை அகற்றும் ஊழியருக்கு 700ரூ, கேட்கிறார்கள். மேலும் அவ்வோப்போது 100, 200, என பணத்தை பிடுங்குறிரார்கள்.பணம் தரவில்லை என்றால் தகாத வார்த்தையில் மிகவும் இழிவாக பேசுகிறார்கள்.
பணம் தர மறுத்தால் உள்ளே இருக்கும் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு ஏதேனும் ஆகுமோ ( bed தராமல் அழைகடிப்பது) என அஞ்சி நிறைய மக்கள் பணம் கொடுத்து விடுகிறார்கள். பணம் இல்லாத ஏழைகளுக்கு தான் அரசு மருத்துவமனை, அப்படி இருக்க இப்படி லஞ்சம் வாங்கினால் ஏழைகளின் நிலை என்ன .....?????
மருத்துவமனை முழுவதும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என வாசகம் எழுதி போட்டு விட்டு, வரும் கர்ப்பிணி பெண்கள் குடும்பத்தாரிடம் இப்படி பணம் வாங்குவது மிகவும் கண்டிக்க தக்க செயல். இது போன்று நடப்பதில்லை என்று சொல்லவே முடியாது... மருத்துவமனையில் இருக்கும் கர்பிணிகளிடம் கேளுங்கள் தெரியும் அவர்களது கண்ணீ ர்.........
தயவு செய்து இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் தமிழக முதல்வர் உயர்திரு, எடப்பாடி ஐயா, அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து ஏழை மக்களை காத்து உதவுமாறு பணிவுடன் கேட்கிறோம்..