கல்லூரி மாணவனை தற்க்கொலைக்கு துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
தஞ்சாவூர் மாவட்டம் , மாதா கோட்டை அருகே இருக்கும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் (B.COM….C.A)படிக்கும் மாணவன் மீரான் மைதீன் பர்மா காலனி விளார் சாலையில் வசிக்கும் இவர், ஒரு வாரத்திற்கு முன்பு கல்லூரியில் படிக்கும் சில பெண்களோடு நட்பு ரிதியாக பேசி கொண்டிருந்தை பார்த்த கல்லூரி
முதல்வர் மகேஷ்வரன் மற்றும் துறை தலைவராக இருக்கும் சங்கீதாவும் , ஆகிய இருவரும் சேர்ந்து மானவண் மீரான் மைதீனை மிகவும் இழிவாக பேசி , காலை முதல் மாலை வரை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்து அவமானம் படுத்திய மகேஷ்வரன் , சங்கீதா ஆகிய இருவரையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .
இந்த அவமானம் தாங்க முடியாமல் மீரான் மைதீன் நேற்று மதியம் 3 எலி பேஸ்ட்களை வாங்கி தின்று உள்ளார். மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு உயிருக்கு போராடி வரும் மீரான் மைதீனுக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
தமிழகத்தில் கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவ, மாணவிகள் தற்க்கொலை செய்து கொள்வதும், முயற்ச்சிப்பதும், தொடர்ந்த வண்ணமாக உள்ளது. இது போன்ற சம்பங்களை முற்றிலும் தடுக்க படுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென கேட்டு கொள்கிறோம் .
எனவே : மருத்துவ மனையில் உயிருக்கு போராடி வரும் மானவண் மீரான் மைதீன் உயிருக்கு எவ்வித அசம்பாவிதம் ஏற்ப்ட்டால் அதற்கு அன்னை வேளாங்கன்னி கல்லூரி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மீரான்மைதீனை அசிங்க படுத்தி கொடூர மன உளைச்சலை ஏற்படுத்தி தற்க்கொலைக்கு துண்டிய கல்லூரி முதல்வர் மகேஷ்வரன், மற்றும் துறை தலைவராக இருக்கும்
சங்கீதா ஆகிய இருவர் மீது சட்ட ரிதியாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .