இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் சீனா: பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு..!
கொரோனாவால் கடும் பாதிப்பிற்குள்ளான சீனாவில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளிகளில் மாணவர்கள் உணவு உண்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முறையாக கைகளை கழுவுவது, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று உணவை வாங்குவது, சரியான இடைவெளி விட்டு அமர்வது, எல்லோரும் ஒரே நேரத்தில் உணவருந்தாமல் பாதி பேர் உண்ணும்போது மீதி உள்ளவர்கள் காத்திருப்பது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவில் மாணவ, மாணவியர் அவற்றை கடைப்பிடித்து கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முறையாக உணவருந்துகின்றனர்.