ஊரடங்கை எப்படி பாதுகாப்பாக தளர்த்தலாம்...நிபுணர்கள் சொல்வது என்ன..
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தியேட்டர்கள், மால்கள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டள்ளன.
21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனாலும் நோய் தொற்று கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அத்தியாவசிய கடைகளான மளிகைக்கடை, காய்கறி கடை, கறிக்கடை, பெட்ரோல் பங்கு ஆகியவை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அவைகள் திறப்பதற்கான நேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை என நிர்ணயிக்கப்பட்டுள்ள்து.
அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே வருபவர்களின் மீது போலீசார் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மக்கள் வெளியே வந்தாலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை உடனே திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.
இருந்தாலும் இதுகுறித்து அனைத்து முதலமைச்சர்களுடனும் நாளை பிரதமர் காணொலி காட்சி மூலம் நடத்தவுள்ள ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஊரடங்கு உத்தரவை சிறிது காலம் தளர்த்திவிட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கை எப்படி பாதுகாப்பாக தளர்த்தலாம் என்பது குறித்து நிபுணர்கள் கூறும்போது, “பொருட்களின் போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் பயணிகள் பயணம் தடை செய்யப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மே 30 வரை மூடப்பட வேண்டும். அதேசமயம் ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆடைகள், கட்டுமான பணிகள் உட்பட அனைத்து தொழில்களிலும் 50 சதவிகித ஊழியர்கள் அனுமதிக்கப்படலாம்.
கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு ...
ஆன்லைன் சுகாதார சேவைகளை ஊக்குவிக்க வேண்டும். குறைந்த அளவு பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை குறைக்கலாம். ஏப்ரல் 30 வரை பேருந்து, ரயில், மெட்ரோ, விமானம் போக்குவரத்துகளை தவிர்க்கலாம். ஆனால் ஆட்டோ ரிக்ஷாக்களை அனுமதிக்கலாம்.” எனத் தெரிவிக்கின்றனர்.