ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டமும் தொடர்ந்து கண்காணிப்பு...
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் பொதுமக்கள் நடமாட்டத்தையும் காவல்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் அப்படிப்பட்ட பகுதிகளுக்கு நேரில் ரோந்து செல்வதை தவிர்த்து ட்ரோன் மூலமாக காவல்துறையினர் கண்காணிக்கின்றனர்.
அசோக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்தனர். இதேபோல, 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ட்ரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
ட்ரோன்களில் ஒலிபெருக்கி இருப்பதால் வெளியில் வரும் நபர்களை எச்சரிக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் ஜாம் பஜாரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, கடைகள், குடியிருப்பு பகுதிகளையும் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்தனர்.