SOCIAL DISTANCING-ஐ தவிடுபொடியாக்கிய மோடியின் அறிவிப்பு; வீதியில் ஊர்வலமாக சென்ற மக்கள்!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் எனவும், வேறு எதற்காகவும் வெளியே அநாவசியமாக சுற்றித்திரியக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெருக்களில் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை கண்டித்தும், எச்சரிக்கை விடுத்தும், சமயங்களை கைது, வழக்குப்பதிவுகள் போன்ற சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 9 மணியில் இருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் மக்களோ ஒரு படி மேலே சென்று, பட்டாசுகளை வெடிப்பதும், வீதிகளில் கூடுவதுமாக வந்து திருவிழாவை போன்று கொண்டாடியுள்ளனர்
ஊரடங்கு காரணாமாக உலகெங்கும் காற்று மாசுபாடு குறைந்து இயற்கை தன்னிலைக்கு மீண்டும் திரும்பியது என்பதை அண்மைக்காலங்களாக பார்த்துகொண்டிருந்த வேளையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் மாசு ஏற்பட்டதோடு, கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையும் தவிடு பொடியானதே மிச்சமானதாக இன்றைய இரவு நிகழ்ந்தவையின் மூலம் உணர முடிகிறது
ஒற்றுமையை பலப்படுத்துவோம் என்ற பெயரில் சங்கிகள் சிலர் அதீத ஆர்வத்தில் தெருக்களில் கூடியது கொரோனா வைரஸ் மீதான அச்சம் மக்களிடையே மேலோங்கியுள்ளது.