புதுச்சேரியில் வியாபாரிகளிடம்  காய்கறிகளின்  விலையை  உயர்த்தி விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்  நாராயணசாமி எச்சரித்தார்...

புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் பொதுமக்கள் அதிகளவு கூடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. 


மேலும் மக்கள் ஒரே இடத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதால் அதிக மக்கள் கூடுவார்கள் என்பதாலும் காய்கறி அங்காடிகளை புதிய பேருந்து நிலையம் மற்றும் லாஸ்பேட்டை மடுவுபெட் பகுதியில் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் இங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலை குறித்தும் , அங்கு மக்கள் சமூக இடைவெளியை விட்டு நின்று பொருட்களை வாங்குகிறார்களா என்பது குறித்தும் முதல்வர் நாரயணசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.


அப்போது வியாபாரிகளிடம்  காய்கறிகளின்  விலையை  உயர்த்தி விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 


மேலும் மக்கள் கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியுடன், முகக்கவசத்துடன் வரவேண்டும் என்று முதல்வர்  கேட்டுக்கொண்டார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்