கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரித்து புறநகரில் அமைக்க பரிசீலனை..

சென்னை கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரித்து புறநகரில் அமைப்பது குறித்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.


கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் பிரித்து அமைப்பது குறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரநிதிகளுடன் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


கோயம்பேடு சந்தையை புறநகரில் பிரித்து அமைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என கார்த்திகேயன் தெரிவித்தார்.


கோயம்பேடு சந்தையில் ஏற்கெனவே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதாகவும், மேலும் 4 பேருக்கு உறுதியானால் சந்தையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


இதற்கு ஆட்சேபம்  தெரிவித்த வியாபாரிகள் சங்கத்தினர், கோயம்பேடு சந்தையை அரசு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், வியாபாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்குமாறு சங்க பிரதிநிதிகளை அறிவுறுத்தியதோடு மீண்டும் நாளை காலை ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்