மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வரும் 16ந் தேதி திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் மேலும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் சபரிமலை அய்யப்பன் கோயில் நடை அடுத்த மாதம் 16ந்தேதி திறக்கப்படுகிறது.