பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன - சோனியா
நாடும், ஜனநாயகமும் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா குற்றம் சாட்டி உள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளிடையே காணொலி காட்சி மூலம் பேசிய அவர், வேளாண் சட்டங்கள், கொரோனாவைக் கையாளுதல், பொருளாதார மந்தநிலை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
பா.ஜ.க.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சோனியா குறிப்பிட்டார்.
21 நாட்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்துவதாகக் கூறிய பிரதமர், தற்போது மக்களைக் கைவிட்டு விட்டதாகவும் சோனியா தெரிவித்தார்.