யூடியூப்பரை தாக்கி ஆயில் அபிசேகம் பெண் போராளிகள் ஓட்டம்..! தனிப்படை போலீஸ் தேடுகின்றது

யுடியூப்பில் பெண்கள் குறித்து ஆபாசமாக விமர்சித்த யூடியூப்பர் ஒருவரை அவரது அலுவலகம் தேடிச்சென்று


ஆயில் ஊற்றி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண் போராளிகளுக்கும் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தலைமறைவான அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த பலர் யுடியூப் மூலம் சுய வேலை வேய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அரசியல் தொடங்கி ஆன்மீகம் வரை சமையல் முதல் சாப்பிடுவது வரை அனைத்தையும்


யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் நாயர் என்பவர் தான் பதிவிடும் வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகின்றது.


இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல டப்பிங் கலைஞர் பாக்கியலெட்சுமி தலைமையில் பொங்கி எழுந்த 3 பெண் போராளிகள் கையில் குரூடாயிலுடன் விஜய் நாயரை தேடி அவர் தங்கி இருந்த அறைக்கே சென்று அவர் மீது ஆயிலை ஊற்றி அடித்து


அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகின்றது ஒரு கட்டத்தில் அவர் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை இழுக்க மிரண்டு போன விஜய் நாயர் கையெடுத்து கும்பிட்டு தான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கோரினார். அவரது அறையில் இருந்து யூடியூப்பர்களின் சொத்தாக கருதப்படும் கேமரா செல்போனையும், லேப்டாப்பையும் தூக்கிச்சென்றதோடு இந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து


பாக்கியலெட்சுமி தலைமையிலான போராளிகள் சமூக வலைதளங்களிலும் பரப்பிவிட்டனர். விஜய் நாயர் பதிவிட்ட வீடியோக்களை விட அவருக்கு அடி விழுந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்தது. கேரள யூடியூப்பர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய


இந்த சம்பவம் குறித்து தம்பானூர் காவல்துறையினர் பாக்கியலெட்சுமி உள்ளிட்ட 3 பெண்கள் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 3 பேரும் நீதி மன்றத்தின் முன் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என சுட்டிகாட்டி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


இதையடுத்து பாக்கியலெட்சுமியை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்ற நிலையில் அவர் உள்ளிட்ட ஆவேச தாக்குதல் நடத்திய பெண் போராளிகள் 3 பேரும் தப்பி ஓடி தலைமறைவானது தெரியவந்தது. மூவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


முன்பெல்லாம் யூடியூப்பர்களின் கருத்து பிடிக்க வில்லையென்றால் கமெண்டில் எதிர்கருத்தால் சண்டையிட்டவர்கள், தற்போது வாடகைக்கு ஆட்டோ பிடித்து யூடியூப்பர்களின் வீட்டுக்கேச் சென்று கையால் சண்டையிட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்