ரஜினியின் முதல்வர் வேட்பாளர் ''சகாயம் ஐஏஎஸ்''..!கணக்கு சரியா வருமா..
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதால் அவர் அடுத்து அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியில் அமர்ந்த சகாயம் ''லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்'' என்ற வார்த்தையை வேதவாக்காக கொண்டு செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் குடியேறினார்.
இவரது பணி காலத்தில் மதுரை கிரானைட் குவாரியில் அரங்கேறிய ரூ.1,12,681 கோடி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஊழலை குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றமே சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது. விசாரணையை துவக்கிய மூன்றே மாதத்தில் நீதி நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தவர், குவாரிகளை மட்டுமல்லாமல் கிரானைட் குவாரிகளை அரசி ஏற்க வேண்டும் என நீதிமன்றத்தில் குரல் கொடுத்தார்.
இந்நிலையில், மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக பணியில் அமர்ந்தார். அரசு பணியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சகாயத்திற்கு ஒய்வு காலம் முடிவடைய மூன்று வருடங்கள் உள்ள நிலையில் தற்போது விருப்பு ஒய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.