ரயிலில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் "என் தோழி" திட்டம்
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி திட்டத்தை ரயில்வே பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் தனியாக செல்லும் பெண் பயணிகள், ரயிலில் ஏறியது முதல் இறங்கி வீடு சென்று சேரும் வரை காண்காணித்து பாதுகாக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் என் தோழி அமைப்பை தொடங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் இந்த திட்டத்தை ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், பெண் பயணிகளுக்கு ரயில் பயணத்தின்போது ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் மூலம் உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு, ரயில் புறப்படும் நிலையங்களில் 5 பெண்கள் கொண்ட பாதுகாப்பு படை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.