உலக வங்கி பணத்தாள்கள் மூலம்  பொது அறிவை வளர்க்கும் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம்

உலக வங்கி பணத்தாள்கள் மூலம் 


உலக வங்கி பணத்தாள்கள் மூலம் 


பொது அறிவை வளர்க்கும் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.


 


 திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் குறித்து நிறுவனர் தலைவர் விஜயகுமார் பேசுகையில்,


நோட்டாஃபிலி என்பது காகிதம் மற்றும் பாலிமர் பணத்தாள்களின் ஆய்வு மற்றும் சேகரிப்பு ஆகும் .நோட்டா லத்தீன் வார்த்தைக்கு பணத்தாள், பிலி கிரேக்க வார்த்தைக்கு காதல் என்று பொருள் ஆகும். நோட் டோ பிலி என்றால் பணத்தாள் மீதான காதல் அல்லது அன்பு ஆகும்.


 


வங்கிப் பணத்தாள் சேகரிப்போரை நோட்டபிலிஸ்ட் என்பர். ஒரு notaphilist பொழுதுபோக்கிற்காக, வங்கிப் பணத்தாளினை சேகரிப்பர்.


 


வங்கிப் பணத்தாளினைக் கொண்டு


வனவிலங்குகள், கப்பல்கள், பிரபலமானவர்கள் தலைப்பிலும்,


தேதிகள் கொண்டும்,நாடு சார்ந்தும், காகிதம் அல்லது பாலிமர் வங்கிப்பணத்தாளையும்,அச்சுப்பொறி,


வரிசை எண்,தரம்,பெரிய அல்லது சிறிய வடிவமைப்பு,அச்சிடும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பிழைகள், நட்சத்திர குறியீடுகள், அலங்கார எண்கள் என பல்வேறு கருப்பொருள்களை கொண்டு வங்கி பணத்தாள்களை சேகரிப்பார்கள்.


 


 அதுமட்டுமின்றி ஒவ்வொரு பணத்தாளின் பின்புறம் அந்நாட்டின் சிறப்புகளை வலியுறுத்தும் விதமாக கல்வி ,கலை ,கலாச்சாரம் ,வரலாறு, விஞ்ஞானம், வேளாண்மை, நம்பிக்கை, விளையாட்டு, விலங்குகள் என இடம்பெற்றிருக்கும் அது அதைக் கொண்டு நாட்டின் வரலாறு, கலை, கலாசாரம், பொருளாதாரத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துரைக்கின்றோம்.


 


அவ்வகையில் பிரதி மாதம் ஞாயிறு பணத்தாள்கள் சேகரிப்பாளர்களைக் கொண்டு மாதாந்திர கூட்டம் நடத்தப்படுகிறது.


 


கூட்டங்களில் சேகரிப்பாளர்கள் சேகரிக்கும் கருப்பொருள்களை கொண்டு காட்சி படுத்தி அதனை பிற சேகரிப்பாளர்கள் அறியும் விதம் எடுத்துரைக்கப்படும்.


 


மேலும் சேகரிப்புக்கலை குறித்து சேகரிப்பாளர்கள் அறிந்துகொள்ளும் விதமாக 28 தலைப்பில் ஆங்கில நூல்களும் 90 தலைப்பில் தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.


 


 இந்திய அஞ்சல் துறை திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலம் மூலம் நூற்றாண்டு கண்ட ஒரு ரூபாய்க்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு ரூபாய் பணத்தாளினை சிறப்பு அஞ்சல் உறையில் வைத்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


 


வருடாவருடம் ஒருமுறை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிப்பு கலையில் ஈடுபட்டோரைக் கொண்டு கருத்தரங்கும், கண்காட்சியும் நடத்துகின்றோம் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்