புதிய மின் இணைப்புக்கு கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
புதிய மின் இணைப்பு பெற கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை அடிப்படையில், புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிப்பு சான்று கட்டாயம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு கடந்த 6ம் தேதி திரும்பப் பெறப்பட்டது. இதை எதிர்த்து கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவை திரும்ப பெற்றதற்கு தடை விதித்ததுடன், பதிலளிக்க தமிழக அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மாகழகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்