இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
சர்வதேச சகிப்புத் தன்மை தினம்
நவம்பர் 16 கடைப்பிடிக்கப்படுகிறது. சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோ
அமைப்பு தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடியது. யுனெஸ்கோ
தனது சகிப்புத்தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களைத் தயாரித்து நவம்பர் 16 இல் வெளியிட்டது. உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996ம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது என்பதை வரலாற்றில் நாவம்பர் 16 குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.