நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டும், கழுத்தை அறுத்தும் கொலை
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர்.
போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்ற போது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர்.
இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.