"நிவர் புயல்" - தயார் நிலையில் 30 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்..!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், நிவர் புயல் மீட்பு பணிக்காக, 30 பேரிடர் மீட்பு குழுக்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை அறிவித்துள்ளது.
புயல் மற்றும் அதி கனமழையின்போது ஏற்படும் சேதங்களின்போது, மீட்பு பணிகளில் ஈடுபட, தமிழ்நாட்டிற்கு 12 குழுக்களை, தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பியிருக்கிறது. புதுச்சேரியில் 2 குழுக்களும், காரைக்காலில் ஒரு குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர், விசாகப்பட்டினத்தில், தலா 3 குழுக்களும், சித்தூரில் ஒரு குழுவும், முகாமிட்டுள்ளதாக, தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக விரைந்து செல்ல, மேலும் 8 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது.