சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 58 தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது - அமைச்சர் வேலுமணி..

சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 58 தெருக்களில் மட்டுமே தற்போது மழைநீர் தேங்கியுள்ளதாகவும், அவை கூடுதல் இயந்திரங்கள் மூலம் 2 அல்லது 3 தினங்களில் வெளியேற்றப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசு முகாமை பார்வையிட்டு, மழையால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதித்த பகுதிகளில் பாதிப்பு குறைவாக இருந்ததாக தெரிவித்தார்.


சென்னையில் நேற்று முன்தினமும், நேற்றும் மட்டும் 287 மரம் மற்றும் கிளைகள் சாய்ந்தாக தெரிவித்தார். சென்னையில் பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் இரவோடு இரவாகவே அகற்றப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.


கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 17,500 வீடுகளுக்கு மாற்று இடம் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 8,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்