உச்சநீதிமன்றம் கொரோனாவால் ஒருநாள் கூட மூடப்படவில்லை- நீதிபதி போப்டே
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட உச்சநீதிமன்றம் மூடப்படவில்லை என்று தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
71-வது அரசியலமைப்பு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார். கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றம் 15 ஆயிரம் வழக்குகளையும் உயர்நீதிமன்றங்கள் ஒன்றரை லட்சம் வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பளித்ததாக சுட்டிக் காட்டினார்.
நீதித்துறைக்கு அச்சமும் சவாலும் ஏற்படும் வகையில் அதிர்ச்சிகரமான முறையில் கொரோனா பரவிய போதும், உச்சநீதிமன்றம் தனது கதவுகளை அடைக்கவில்லை என்று தெரிவித்தார். மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள் ஏராளமாக இருந்ததாகவும் போப்டே குறிப்பிட்டார்.