வாராக்கடன் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீக்குமாறு ரிசர்வ் வங்கி வேண்டுகோள்
வாராக்கடன் அறிவிப்பை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வட்டிக்கு வட்டி விதிப்பதற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த உத்தரவு பிறக்கப்படும் வரை கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்த போது இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை வருகிற 18ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.