அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளைகளில் தேநீர்- அமைச்சர் பியூஷ் கோயல்
இன்னும் சில மாதங்களில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளைகளில் தேநீர் விற்பனை செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் பேசிய அவர்,தற்போது 400 ரயில் நிலையங்களில் மண் குவளைகள் மூலம் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாகக் குறிப்பிட்டார்.
இது பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கி ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மண்குவளை தேநீர் விற்பனை மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.