சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
வியாபாரிகள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
வழக்கு விசாரணை துவங்கிய நிலையில் 9 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிபிஐ சார்பில் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து 9 பேரையும் மீண்டும் அடுத்த மாதம் 10ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி வடிவேல் உத்தரவிட்டார்.