புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கல்வி நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தொழில் முனைவோராக்கவும் புதிய பாடப்பிரிவுகள் கட்டாயம் தேவைப்படுகிறது.
எனவே, தங்களின் கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட புதிய படிப்புகளின் பட்டியலை விரிவான பாடத்திட்டத்துடன் ஏஐசிடிஇ-க்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி ஆலோசனை வழங்கலாம்.
புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறும் பணிகள் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என்று ஏஐசிடிஇ அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறப்பட்டுள்ளது