பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலைக்கு மாவட்ட பதவி - ரவுடிகளை இணைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க!
கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள பெண் தாதா அஞ்சலைக்கு பா.ஜ.க-வில் மாவட்ட அளவிலான பதவி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள், மோசடி பேர்வழிகள் என யாராக இருந்தாலும் பரவாயில்லை என கட்சிக்குள் இழுத்து எப்படியாவது உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் பா.ஜ.க பின்பற்றிய இந்த நடைமுறை சமீபகாலமாக தமிழக பா.ஜ.க-விலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகளும், குற்றப் பின்னணி கொண்டவர்களும் பா.ஜ.க-வில் இணைவது தொடர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி முரளி, வடசென்னையைச் சேர்ந்த கல்வெட்டு ரவி, சத்யா உள்ளிட்ட பலர் இதுவரை பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.
பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலைக்கு மாவட்ட பதவி - ரவுடிகளை இணைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க!
இந்நிலையில் சென்னையை கலக்கிவரும் பிரபல பெண் தாதாக்களில் ஒருவரான புளியந்தோப்பு அஞ்சலை, பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஞ்சலை மீது ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட விவகாரங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாதா புளியந்தோப்பு அஞ்சலைக்கு, வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கியுள்ளது தமிழக பா.ஜ.க. பா.ஜ.க தொடர்ந்து ரவுடிகளை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கி வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.