திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.


தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது, யார் வேட்பாளராக நிறுத்தப்பட போகிறார்கள் என்ற தகவல் கட்சி தொண்டர்களுக்கு தெரியவரும்போதுதான் பரபரப்பு அதிகமாகும்.


அந்த வகையில் திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.


திமுக பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாத நிலையில் இந்த முறை கட்டாயம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதிக சீட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு அருகில் வந்து வாய்ப்பை நழுவவிட்டது திமுக. பல இடங்களில் 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு வாரிக் கொடுத்ததே தோல்விக்கான காரணமாக கூறப்படுகிறது.


அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களைக் கொடுத்ததன் விளைவாக அந்த இடங்களில் எல்லாம் அதிமுக வெற்றி பெறுவது எளிதாக இருந்தது. அதேசமயம் காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் தேர்தல் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் காங்கிரஸ்காரர்களால் அப்போது முன்வைக்கப்பட்டது. எது எப்படியோ, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கொடுத்தாலே போதும் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துவிட்டதாக கூறுகின்றனர். பிகார் தேர்தல் முடிவுகளும் இதற்கு சாதகமாக அமைந்துவிட்டன.


மக்களவைத் தேர்தலின் போதே காங்கிரஸ் கட்சிக்கு திமுக அதிக இடங்களை விட்டுக்கொடுத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.


தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 இடங்களில் 10 இடங்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதாவது நான்கில் ஒரு பங்கு காங்கிரஸுக்கு. அந்த அளவு காங்கிரஸ் தமிழகத்தில் வலிமையாக இருக்கிறதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.


மக்களவைத் தேர்தல் முடிவின் போது நாடு முழுவதும் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்துவருகிறது என்று பேசப்பட்ட போது தமிழ்நாட்டில் மட்டும்தான் அதன் கௌரவம் திமுகவால் காப்பாற்றப்பட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்


பிகார் தேர்தல் முடிவுகளை வைத்து காங்கிரஸை எடை போடக்கூடாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதல்லவா, எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியவில்லை என்ற ரீதியில் பேசியுள்ளார்.


ஆனால் திமுக 40க்கு 40 என்று வெற்றி பெறாமல் போனதற்கும் காங்கிரஸ்தானே காரணம். கூட்டணியில் இடம் பெற்ற அத்தனை கட்சிகளும் தங்கள் தொகுதிகளில் 100 சதவீதம் வெற்றியை பெற்ற நிலையில் தேனியில் காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் தோல்வி கண்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்