மாற்று கட்சியினருடன் தொடர்பு வைத்திருப்பதாக ரஜினி மக்கள் மன்ற 22 மாவட்ட செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
மாற்று கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்த மற்றும் மன்ற பணிகளில் முழுமையாக ஈடுபடாத 22 மாவட்ட செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ரஜினி மக்கள் மன்ற தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரியில் புதிய கட்சியை தொடங்க போவதாகவும், கட்சி தொடங்கும் தேதியை 31-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன முர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பல மாவட்ட செயலாளர்கள் மாற்று கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதுகுறித்து விளக்கம் கேட்கவும், முறையான பதில் தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு பதில் 31ஆம் தேதி புதிய நிர்வாகிகள் பெயரை ரஜினி அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.