திட்டமிட்டபடி புதிய கட்சி குறித்த அறிவிப்பு?: ரஜினியுடன் நிர்வாகிகள் ஆலோசனை
திட்டமிட்டபடி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக ரஜினியுடன் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நேற்றிரவு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை, ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர், 70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள பூத் கமிட்டி பணிகள் தொடர்பாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், திட்டமிட்டபடி டிசம்பர் 31ம் தேதி கட்சியின் அறிவிப்பை வெளியிடுவது குறித்தும் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.