நாளை பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இசையமைப்பாளர் இளையராஜா தமது உடமைகளை எடுப்பதற்காக நாளை பிரசாத் ஸ்டுடியோ செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது உதவியாளர் மற்றும் வழக்கறிஞருடன் நாளை பிரசாத் ஸ்டுடியோ செல்லும் இளையராஜா, அங்கு தியானம் மேற்கொள்வதோடு, தாம் எழுதிய இசை கோர்ப்புகள், தனக்கு சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறவுள்ளார்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இளையராஜாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக அவகாசம் தேவைப்பட்டால், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர்களான லட்சுமிநாராயணன், நவீன்குமார் மூர்த்தி ஆகியோரிடம் அனுமதி பெற்று, ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.