இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம்.. பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா..
பொதுக்குழு கூட்டம் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.