தமிழ்நாடு பிரஸ் - மீடியா யூனியன் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் மாநில மாநாட்டு விழாவில் பத்திரிகையாளர்களின் பொதுவான முக்கிய கோரிக்கை களைகளை அரசு ஆவண செய்து தரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழ்நாடு பிரஸ்மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் என்ற பெயரில் 18 மாநில மாநாடு நடத்திவிட்ட இந்த பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு கடந்த 31.12.1994 அன்று தென் மாவட்ட நிருபர்கள் பேரவை என்ற பெயரில் தான் முதன்முதலில் நாகர்கோவிலில் உதயமானது. அப்போது இருந்த மொத்த உறுப்பினர்கள் 65 நபர்கள் தான்.
- 31.12.1994ல் சங்க துவக்க விழாவின்போது கௌரவத் தலைவராக பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், தலைவராக அவர்களை தேர்வு செய்தபோது எடுத்தப்படம்
- 2வது மாநில மாநாடு சென்னை பல்லாவரத்திலுள்ள சிவந்தி ஆதித்தன் கல்யாண மண்டபத்தில் நடந்த போது தமிழக தேர்தல் ஆணையர் திரு.கே.மலைச்சாமி அவர்கள் உரையாற்றியபோது எடுத்தப்படம்.
- 3வது மாநாடு சென்னை வடபழனியிலுள்ள இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடந்தது அப்போதைய நமது சங்கத்தின் கௌரவத் 'தலைவரும். பிரபல எழுத்தாளருமான தாமரை செய்தூர்பாண்டி மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார்.
- 4வது மாநில மாநாடு புதுக்கோட்டையில் நடந்த போது தமிழரசி, புதியபார்வை ஆசிரியர் திரு. ம. நடராஜன் தலைமையில் நடந்த போது எடுத்தப்படம். அருகில் (இடது) செயலாளர் கென்னடி, தலைவர் - உள்ளனர
- 5வது மாநில மாநாடு சென்னை நடிகர் சங்கத்தில் நடந்தபோது மத்தியமைச்சராக இருந்த பொன். ராதா கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். அருகில் திருமாவளவன் உள்ளார்.
- 6வது மாநில மாநாடு சென்னை நடிகர்கள் சங்கத்தில் நடந்தபோது அப்போதைய பொதுச்செயலாளர் திரு.கென்னடி உரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தின ராக பி.ஜே.பி. திரு.இலகணேசன் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
- 7வது மாநாடு சென்னை பி.டி.தியாகராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. என்.ஜி.ஓ.சங்கத் தலைவர் கோ.சூரிய மூர்த்தி, மக்கள் தேசம் தலைவர் சாத்தை பாக்யராஜ், சிலம்பு சுரேஷ், டாக்டர் சுராணா சட்ட ஆலோசகர் திரு.கோவிந்தன் ஆகியோர் உள்ள னர்.
- 9வது மாநில மாநாடு பிலிம்சேம்பரில் நடைபெற்ற போது டிஜிபி. குமாரசாமி, தென்னிந்திய இலங்கை தூதர் நாகந்தலா, நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 9வது மாநாட்டு மலரை வெளியிட்ட போது எடுத்தப்படம்.
- 10வது மாநில மாநாடு ராணி சீதை ஹாலில் நடந்தபோது நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், சட்ட தலைமை ஆலோசகர் எம்.கே.கோவிந்தன், டாக்டர் சுராணா ஆகியோர் மாநாட்டு மலரை வெளியிட்டபோது எடுத்தப்படம்
- 11வது மாநில மாநாடு ஸ்ரீயான்ஸ் மஹாலில் நடைபெற்றபோது சென்னை மேயர், ம.சுப்பிரமணியம் உரையாற்றுகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குண பாண்டியன், அமைச்சர் தமிழரசி, தகவல் அறியும் உரிமைப் பெறும் துறை இயக்குனர் திரு.இராமகிருஷ்ணன் சென்னை தூர்தர்ஷன் செய்தி இயக்குனர் திரு.மாரியப்பன் ஆகியோர் உள்ளனர்.
- 12வது மாநில மாநாடு அண்ணா கலையரங்கத்தில் நடந்தபோது செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு. பரிதி இளம்வழுதி, சென்னை ஆட்சித்தலைவர் திருமதி.ஜெயா ஆகியோர் மாநாட்டு மலரை வெளியிட்ட போது எடுத்தப்படம்.
- 14வது மாநில மாநாடு சென்னை அண்ணாமலை மன்றத்தில் 27.03.2010 அன்று நடைபெற்றபோது மாநாட்டு மலரை நீதிபதிகள் வெளியிட திருநாவுக்கரசர் பெற்றுக்கொண்டபோது...
- 15 வது மாநில மாநாடு சென்னை அண்ணாமலை மன்றத்தில் கடந்த 7.3.2011 அன்று நடைப்பெற்றபோது அகில இந்திய பத்திரிகை தொழிலாளர்கள் சம்ளேன பொதுச்செயலாளர் தோழர் மதன் தல்வார், திருமதி. எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் குத்து விளகிகேற்றி 15வது மாநாட்டை துவங்கிய காட்சி.
பின்னர் தமிழக அளவில் இந்த பெயர் பொதுவாக இருந்தால் நன்றாக இருக்குமென்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 2.01.1995 அன்று சென்னை சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு நிருபர்கள் சங்கம் என்று பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து 6 ஆண்டுகள் மாநில மாநாடுகள் நடத்தி ஒவ்வொரு மாநாட்டிலும் மாநாட்டுக்கு சிறப்பு மலரும் தவறாமல் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாநாட்டிலும் தமிழகப் பத்திரிகையாளர் களின் பணி பாதுகாப்பு, பத்திரிகையாளர்களுக்கான அடிப் படைப் பிரச்சனைகள் ஆகியன அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு மாநில, மைய அரசுகளின் கவனத்துக்கு எடுத்து செல் வதையே வழக்கமான பணியாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக பத்திரிகைத் தொழில் நசிவடைவதைப்போல ஒரு தோற்றம் தமிழ் நாட்டில் உருவெடுத்துள்ள ஒரு காலச் சூழ்நிலை ஏற் பட்டது. எனவே பத்திரிகைப் பணியாளர்களைப்போல ஊடகத் துறையில் பணிபுரிபவர்களையும் அரவணைத்துச் செல்ல ஒரு அமைப்பு உருவாக்கிட வேண்டுமென்ற நோக்கத்துடன் தமிழ்நாடு நிருபர்கள் சங்கம் என்று இயங்கிவந்த பெயரை கடந்த 09.09.2002 அன்று முதல் சென்னையிலுள்ள தொழிலாளர் நலத் துறையில் லேபர் யூனியன் சட்டப்படி தமிழ்நாடு பிரஸ் - மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (TNP&MRU) என்று பெயரிட்டு பதிவு செய்து அதற்குரிய சான்றிதழ் பெற்று செயல்படத் துவங்கியது. ஆரம்பத்தில் வெறும் 65 உறுப்பினர்களைக் கொண்டு செயல் பட்டிருந்த இச்சங்கம் யூனியனாக மாற்றப்பட்ட போது சென்னை உட்பட தமிழக அளவில் 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன்
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் உரிமையாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களிடையே இச்சங்கம் ஒரு நட்பு பாலமாக செயல்படும். உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு வேலை யளிப்பவர்களுக்கும் இடையே பரஸ்பர உறவை எந்தச் சூழ் நிலையிலும் நிலை நாட்டும். தினசரி வாழ்க்கையில் இயக்கத்தின் முக்கிய பங்கு பத்திரிகை மற்றும் மீடியா ஊழியர்கள் உழைப்பே இன்றியமையாதது, இந்த உழைப்பை பாதுகாக்கும் கடமை இசங்கத்தின் இதயத்துடிப் பாகும். பாதிக்கப்பட்ட உறுப்பினர் களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத் தொகையை பெற்றுத்தரவும் பாடுபடும். இன்றைய விலைவாசிக்கேற்ப நிர்வாகத்தால் ஊதியம் வழங்க இயலவில்லை .
எனவே பத்திரிகை மற்றும் ஊடகத் தொழிலுக்கும் அரசு அங்கீகாரம் வழங்கிட கோருவதுடன் கனைக்க அனைத்து பருவகால பத்திரிகை ஊழியர்களுக்கும், மீடியா பணியாளர்களுக்கும் குடியிருப்பு வசதி, பஸ் மற்றும் இரயில் பாஸ் வசதி, ஓய்வூதியம், மரண ஊதியம், பணி பாதுகாப்பு மற்றும் இச்சங்கத்தின் அங்கத்தினர் சிலரை அரசாங்க அங்கீகார கமிட்டிகளிலும் உறுப்பினராக்குதல் உட்பட பல்நோக்கு வாழ்க்கைத் தேவைகளையும் அரசு ஒத்துழைப்புடன் பூர்த்தி செய்ய துரிதமாக பாடுபடும். உறுப்பினர்கள் வியாதி, வயோதிகம், வேலையின்மை மற்றும் இறப்பு ஆகிய நேரங்களில் தோழமையுடன் உதவி செய்தல். உரிமைக்காகவும், எழுத்துச் சுதந்திரத்திற்காகவும் நியாயமான போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றை மற்ற பத்திரிகை தொழிலாளர் அமைப்புடன் இணைந்து இயங்குதல் ஆகியன தலையாள கடமையாகும். இனி இச்சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்குரிய தகுதிகள் என்ன? எப்படி சேருவது? என்பது பற்றி சுருக்கமாக இங்கு பார்ப்போம். பத்திரிகைகள், ஒலி, ஒளி ஊடகங்கள், வானொலி, தொலைக் காட்சி, சார்டிலைட், சேனல்கள், வெப்சைட் விளம்பர நிறுவனங்கள் ஆகியவற்றில் நிருபர் களாகவும், ஊதியம் பெறும் எல்லா பணியாளர் களும் மற்றும் பத்திரிகைகளை விற்பனை செய்யும் முகவர் களும், சிறிய பிரிண்டிங் பிரஸ், ஆப்செட் பிரஸ் பணியாளர்கள் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இரு பாலரும் இச்சங்கத்தில் உறுப்பின ராக சேரலாம்.
ஆக “தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்” என்ற பெயருக்கு டிராப்ட் இணைத்தும் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் இணைத்தும் அலுவலக முகவரிக்கு அனுப்பி உறுப்பினர் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளலாம். சார்பு உறுப்பினர், தொழில்துறை உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், சிறப்பு உறுப்பினர் ஆகியோருக்கு ஆண்டு சந்தா இல்லை. இவர்களிடம் யூனியன் வளர்ச்சிக்கு என்று நன் கொடையாக பெறப்படும். உறுப்பினராக சேர விரும்புபவர்கள் உறுப்பினர் படிவம் பெற ரூ. 5 X 2க்கு உரிய அஞ்சல்தலை ஒட்டி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
வளர்ச்சியடைய நேர்ந்தது. அந்தக் கால கட்டத்தில் தான் அதாவது 31.01.2004 அன்று புது டெல்லியில் 50 வருடமாக சிறப்புடன் செயல்பட்டுவந்த தேசிய அமைப்பான (AINEF) ஆல் இந்தியா நியூஸ்பேப்பர் எம்ளாயீஸ் பெடரேசனில் (பதிவுஎண் 167) பதிவு செய்து இணைந்து இந்த யூனியன் இப்போதுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, 2005 ஆம் ஆண்டில் சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்ற இந்த யூனியனின் 9வது மாநில மாநாட்டை ஆல் இந்திய நியூஸ்பேப்பர் எம்ளாயீஸ் பெடரேசனின் தேசிய தலைவர் தோழர் மதன் பதனீஸ் அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டு பத்திரிகை, ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த யூனியன் தமிழக அளவில் தன்னந்தனியாகப் போராடிக் கொண்டிருந்தது,
வரும் தமிழ்நாடு பிரஸ் - மீடியா யூனியன் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் மாநில மாநாட்டு விழாவில் பத்திரிகையாளர்களின் பொதுவான முக்கிய கோரிக்கை களைகளை அரசு ஆவண செய்து தரும் என எதிர்பார்க்கப் படுகிறது. பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை நமது சங்கம் சார்பாக தீர்மானமாக நிறைவேற்றி அரசு கவனத்துக்கும் சம்மந்தப் பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் சமர்ப்பித்து வருவது வழக்கம்.